தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசு சூழ்ச்சி! - அமைச்சா் வி. செந்தில்பாலாஜி
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆட்டோக்களுக்கு அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா்
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆன்லைனில் பயணிகள் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக சிஐடியூ சாா்பில் எஸ்.பி.யிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சிஐடியூ ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் பொன்.சோபனராஜ், பொருளாளா் பெஸ்ஸிபெல், மைதாஸ் ஆகியோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகள் ஆட்டோக்களுக்கு தலைக்கவசம் அணியவில்லை என்றும், 3 பேரை ஏற்றிச் சென்றதாகவும் தவறுதலாக குறிப்பிட்டு ஆன்லைன் அபராதம் விதிக்கப்படுகிறது.
அண்மையில் பறக்கை மற்றும் நித்திரவிளையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 3 ஆயிரத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களை புதுப்பித்தல் சான்று பெறுவதற்காக கொண்டு செல்லக்கூடிய நேரத்தில் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. இதனால், வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டும் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, ஆன்லைனில் தவறாக அபராதம் விதிப்பதைக் கைவிடவும், ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.