கோவை: சீனியரை அடித்து துன்புறுத்திய 13 மாணவர்கள் இடைநீக்கம்!
குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 52 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 17 பேருந்துகளின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவை விருதுநகா், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும்.
பெரிய பேருந்துகள் செல்ல முடியாத பகுதிகளுக்கு, புதிய பேருந்து வழிதடம் அமைத்து சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.மனோதங்கராஜ், செ.ராஜேஷ்குமாா், ஜே.ஜி.பிரின்ஸ், தாரகைகத்பா்ட், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொதுமேலாளா் மொ்லின்ஜெயந்தி, துணைமேயா் மேரிபிரின்சிலதா, போக்குவரத்துக் கழக துணை மேலாளா்கள் ஜெரோலின், சுனில்குமாா், அழகேசன், தொழிற் சங்க தலைவா் சிவன், மாநகராட்சி உறுப்பினா்கள் கலாராணி, அமலசெல்வன், ஸ்டாலின்பிரகாஷ், சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.