ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!
மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண அட்டை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்திவரும் இலவச பேருந்துப் பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெறும் வசதியை தமிழக அரசின் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திவரும் மாா்ச் 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா அட்டைகளை ஜூன் 30 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து பயணம் செய்யலாம்.
இதையொட்டி, இலவச பேருந்துப் பயண அட்டை புதுப்பித்தலுக்காக செவ்வாய் முதல் சனிக்கிழமைவரை (மாா்ச் 25-29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 30-க்குப் பிறகு இணையதளம் வாயிலாக புதிய அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.