செய்திகள் :

``அன்று கைத்தட்டி ரசித்தவர்கள், இன்று அதிக பிரசங்கித்தனம் என்கிறார்கள்'' - குமுறும் வேல்முருகன்

post image

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் நடைபெற்ற, கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

அப்போது மாற்றுகட்சிகளை சேர்ந்த பலர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில், "சிவகாசியில் வெடிவிபத்து அடிக்கடி நடைபெறுகிறது. வெடிவிபத்தினால் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் முன்னேற்பாடுகளை செய்யவேண்டும். தகுந்த முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்த கூட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

வேல்முருகன்

பட்டாசு தொழிலாளர்களுக்கு..

தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலங்களில் அரசு உதவித்தொகை வழங்குவதுபோல, இந்த தீபாவளி பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும், சீசன் இல்லாத காலங்களில் உதவித்தொகை வழங்க வேண்டும்.

பட்டாசு வெடி விபத்துகளில் உடல் உறுப்புகளை இழக்கநேர்ந்த நபர்களுக்கு நிரந்தரமாக வருமானம் வரும் அளவிற்கு ஒரு திட்டத்தினை தமிழக அரசு வரையறுக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய பங்களிப்பு தொகை ரூ.3000 கோடியை மத்திய அரசு இதுவரை தரவில்லை. அந்த தொகையினை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

பேட்டி

ஏற்கெனவே மாநில கல்வி நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு தரவேண்டிய 2,157 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை. இப்படி ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதியை மத்திய அரசு கொடுக்காமல் இருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டிக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையாக பல் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். அதை தமிழக அரசு பரிசிலீக்க வேண்டும்.

தினந்தோறும் நடக்கும் குற்றங்கள்..

அருப்புக்கோட்டை வழியாக செல்கின்ற ரயில்கள் நரிக்குடி ரயில் நிலையத்தில் நின்ற செல்வதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதை காங்கிரஸை சேர்ந்த கார்த்திக் சிதம்பரம் மட்டும் சொல்லவில்லை. கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சொல்லிவருகிறோம். அதன்பொருட்டு தமிழக முதல்வரும், காவல்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். குற்றங்கள் நடக்காதவண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

வேல்முருகன்

அதேசமயம், குற்றங்களுக்கு உடந்தையாக உள்ள காவல்துறை அதிகாரிகளை, அத்துறையில் இருந்து களையெடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம் அமைய வேண்டும். மதுவுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. விரைவில் தமிழகத்தில் சாராய ஆலைகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் பெண்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

அமைச்சர் சேகர் பாபுவுடன் வாக்குவாதம் ஏன்?

சட்டமன்றத்திற்குள் நடப்பது அனைத்தும் ஊடகங்களுக்கு பொதுமக்களுக்கு தெரியவருவதில்லை. மருதமலை கோவிலில் விரைவில் குடமுழுக்கு நடக்க உள்ளது. அந்த குடமுழுக்கை தமிழில் நடத்துவது குறித்து பேரவை தொடங்குவதற்கு முன்பாக அமைச்சர் சேகர் பாபுவுடன் விவாதித்தேன். அதில் எனக்கும், அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

அப்போது பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் வாழுகிற எந்த தமிழர்களும் தமிழில் குடமுழுக்கு வேண்டும் என்றோ தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றோ கூறவில்லை. நீங்கள் மட்டும்தான் கூறுகிறீர்கள். இன்றைய நிலைக்கு கோவிலில் இருந்து எல்லா அர்ச்சர்கர்களும் வெளியே செல்வதாக கூறுகிறார்கள் அப்படி வெளியே சென்றால் தி.மு.க. அரசுக்கு இது மிகப்பெரிய கெட்டபெயராக மாறும் என கூறினார்.

இதை நான் ஆரோக்கியமான வாக்குவாதமாக எடுத்துக்கொண்டு அவைக்கு வந்துவிட்டேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஜி.கே. மணி எம்.எல்.ஏ. பேசிக் கொண்டிருக்கும்போது, அதை நாங்கள் எடுக்க தேவையில்லை, மத்திய அரசு செய்ய வேண்டும் என அவர் பதில் கூறினார். அப்போது சில நிதர்சனங்களை குறிப்பிட்டு நான் பேசினேன். அதன்படி கூட்டணி கட்சியான காங்கிரஸ், தான் ஆளுகிற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கிறது. அதன்படி, அனைத்து சாதியினருக்கும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு அளவு அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

அதேசமயம் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பவர்கள் 'தேச விரோதிகள்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் கூறியிருக்கிறார். அதை சுட்டிக்காட்டி பேசினேன் எனது பேச்சை அவையில் இருக்கும் முதல்வர் உள்பட அனைத்து மூத்த அமைச்சர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு மட்டும் வெடுக்கென்று எழுந்து, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி பேசுகிறீர்கள், எதையும் முந்திரிக்கொட்டைத்தனமாக பேச வேண்டாம் என என்னை ஒருமையில் சில வார்த்தைகள் பேசினார்.

பேட்டி

அதேபோல கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வின் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்களில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை கண்டறிந்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகளும், பணியிடங்களும் பறிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பேரவையில் பேசினேன். அப்போதுதான் அமைச்சர் சேகர்பாபு என்னை பேச விடாமல் இவ்வாறு திட்டி பேசினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக எனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் என்னை அனுமதிக்கவில்லை. சட்டப்பேரவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பெயரை குறிப்பிட்டு கேள்வி எழுப்பும் போது அதற்கான விளக்கத்தை அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு உரிமை இருக்கிறது. ஆகவே அந்த உரிமையின் அடிப்படையில் எனக்கு அனுமதி தாருங்கள் என கேட்டு சபாநாயகர் இருப்பிடம் முன்னே சென்று முறையிட்டேன். ஆனாலும் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் தான் நான் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக முதல்வர் கண்டித்தார். இது எனக்கு மன வலியை தருகிறது. நான் புதிதாக எதையும் பேசவில்லை. நான்‌ சமரசமற்றவன். அதனடிப்படையில் தான் இன்றுவரை செயல்படுகிறேன்.

மக்கள் நல விரோத திட்டங்களை எதிர்க்கிறேன்.

தமிழகத்தில் நடக்கின்ற மக்கள் நல விரோத திட்டங்கள் அனைத்தையும் நான் எதிர்க்கிறேன். எடுத்துக்காட்டாக, பரந்துர் விமான நிலைய திட்டம், நெடுஞ்சாலைகளுக்கு விவசாய நில கையகப்படுத்துதல் திட்டம், அம்பானி அதானி துறைமுக திட்டம், எரிவாயு திட்டம் என மக்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யும் அனைத்து திட்டங்களிலும் நான் எனது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறேன்.

பேட்டி

கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொழில் நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை இன்று ரியல் எஸ்டேட் வணிகத்துக்காக விற்கும் முயற்சி நடக்கிறது. இதைத்தடுத்து நிறுத்தி அரசே அந்த நிலத்தை கையகப்படுத்த வேண்டும், தமிழக அரசின் முந்திரி வாரியம், பலாப்பழ வாரியம், அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றை அங்கு ஏற்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வகையில் அதை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் இதை நான் எனது சுயநலத்திற்காக செய்வதாக சிலர் பொய்களை பரப்பி வருகின்றனர்.

கட்சி பாகுபாடு இன்றி பேசியிருக்கிறேன்..

ஒவ்வொரு ஆட்சியிலும் மக்கள் விருப்பத்திற்கு எதிராக, கட்சி வேறுபாடு இன்றி இங்கு அனைத்தும் நடந்து கொண்டிருப்பதாக கருதுகிறேன். தமிழக கவர்னர் சட்டப்பேரவையில் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து பேசியபோது தனியொரு ஆளாக கவர்னர் முன்னே சென்று சபாநாயகரின் இருக்கையில் நீங்கள் அமர்ந்திருப்பது தவறு‌ என கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டேன்.

அப்போது எனது செயலை கைத்தட்டி ரசித்தவர்கள், இன்று அவர்கள் செய்யும் தவறை நான் சுட்டிக்காட்டும்போது கோபப்படுகிறார்கள், அதிக பிரசங்கித்தனம் செய்வதாக கூறுகிறார்கள். இது போன்ற அடுக்கடுக்கான விஷயங்களை என்னால் உதாரணமாக சொல்ல முடியும். கூட்டணியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி கட்சி பாகுபாடு இன்றி தவறுகளை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறேன்.

வேல்முருகன்

இதுவரை எனக்கான ஊடக வெளிச்சம் கிடைக்கவில்லை, அதனால் நான் பெரிய அளவில் வளரவில்லை. தற்போது மாற்றுக் கட்சியை சேர்ந்த பலரும் எனது கொள்கையும், ஒழுக்கமும், நேர்மையும் பிடித்துப்போய் வாழ்வுரிமை கட்சியில் வந்து இணைகிறார்கள். அதன் மூலம் ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல பா.ஜ.க.வை ஒட்டுமொத்தமாகவே ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜ.க.வை நான் எதிர்க்கிறேன். அது போல பா.ஜ.க.வை எதிர்க்கிறவர்களை எதிர்க்கும் கட்சிகளை நான் ஆதரிக்கிறேன்" என பேசினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து

இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார். தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும்வலி உயிரே போகிறது. பிறகு மெள்ளமெ... மேலும் பார்க்க

``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வ... மேலும் பார்க்க

`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (25.0... மேலும் பார்க்க

`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா பதிலடி

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்கேரள தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிலர் கறுப்பு என விமர்சித்ததாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். நிறம் குறித்த பாகுபா... மேலும் பார்க்க

`ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்' - அண்ணன் மகன் கைது சிக்கலில் ஆர்.காமராஜ்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன். அரசு முதல் நிலை ஒப்பந்ததாரரான இவர் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சாலை, கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் டெண்டர் எடுத்து செய்து வருவதாக... மேலும் பார்க்க