செய்திகள் :

கோவை: சீனியரை அடித்து துன்புறுத்திய 13 மாணவர்கள் இடைநீக்கம்!

post image

கோவை: கோவை தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் அடித்துத் துன்புறுத்திய 13 முதலாம் ஆண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை இரவு முழுவதும் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். பணத்தை எடுத்ததாகக் குற்றம்சாட்டி, சீனியர் மாணவரை மண்டியிட வைத்து, கைகளை உயர்த்தச் சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

ரத்தக் காயங்களுடன் சீனியர் மாணவர் வலியால் கதறியும், முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்து உள்ளனர்.

இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரைக் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கல்லூரி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிஎம்சி காலனி அடுக்குமாடி குடியிருப்புப் பணியில் சுணக்கம்!

கோவை சிஎம்சி காலனியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்ட வரும் அடுக்குமாடிக் குடியிருப்புப் பணிகள் சுணக்கமாக நடைபெற்று வரும் நிலையில், கட்டப்பட்ட சில வீடுகளில் பயனாளிகள் குடியேற முயன்றதால் சலச... மேலும் பார்க்க

ஊதிய நிலுவை: ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் போராட்டம்

தனியாா் நிறுவனம் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கூடுதல் ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்புணா்வு: ஆா்எஸ்எஸ் தென்தமிழக மாநிலத் தலைவா் தகவல்

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென்தமிழக மாநிலத் தலைவா் ஆ.ஆடலரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவையில் செய்தியாளா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கோவையில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இன்றைய மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க