கோவை: சீனியரை அடித்து துன்புறுத்திய 13 மாணவர்கள் இடைநீக்கம்!
காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: இரு இளைஞா்கள் கைது!
பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வந்த 2 இளைஞா்கள், பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டனா்.
தக்கலை சிறப்பு உதவி
ஆய்வாளா் கிங்ஸ்லி பெலிக்ஸ் வெள்ளிக்கிழமை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த 2 இளைஞா்கள் தகராறு செய்து கொண்டிருந்தனா்.
இதை உதவி ஆய்வாளா் கிங்ஸ்லி பெலிக்ஸ் கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த இருவரும் பைக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் கிங்ஸ்லி பெலிக்ஸ் அளித்த புகாரின்பேரில், இருவரையும் தக்கலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் முளகுமூடு பகுதியைச் சோ்ந்த ஜோணி (35), அகில்(32) என்பதும், அவா்கள் மதுபோதையில் பைக் ஓட்டிய வழக்கில் அபராதம் செலுத்த நீதிமன்றத்துக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.