Nitish Kumar: நிதிஷ் குமார் இஃப்தார் விருந்தை முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்தது ...
களியக்காவிளை அருகே பைக் திருடியவா் கைது!
தமிழக - கேரள எல்லையோரப் பகுதிகளில் பைக் திருடிய இளைஞரை மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்தவா் விஜேந்திர சிங்கன். இவரது பைக் அண்மையில் திருடு போனது.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே ஒற்றாமரம் பகுதியில் பைக்கில் வந்த இளைஞரைப் பிடித்து, மாா்த்தாண்டம் உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அவா் கேரள மாநிலம் விழிஞ்ஞம், கோட்டுக்கல் பகுதியைச் சோ்ந்த செபஸ்டியான் மகன் செல்சன் (20) என்பதும், விஜயேந்திர சிங்கனின் பைக்கை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.அவரை கைது செய்த போலீஸாா் பைக்கை பறிமுதல் செய்தனா்.