மதுரை: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப் பிடிப்பு!
மதுரை அருகே தனிப்படைக் காவலர் மலையரசன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்தவா் மலையரசன் (36). இவா் சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் தனிப் படை காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவரது மனைவி பாண்டிசெல்வி அண்மையில் நேரிட்ட காா் விபத்தில் சிக்கி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். மனைவியின் மருத்துவ ஆவணங்களை வாங்கச் செல்வதாகக் கூறி விட்டு, திங்கள்கிழமை மதுரைக்கு வந்த மலையரசன் அதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மதுரை சுற்றுச் சாலையில் ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்த நிலையில் இவரது உடல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.
இதையும் படிக்க : அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!
இந்த கொலை வழக்கில் மூவேந்திரன் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மதுரை அருகே திங்கள்கிழமை காலை சுட்டுப் பிடித்துள்ளனர்.
காயமடைந்த மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.