பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
சென்னை - பெங்களூரு போட்டி: நாளை டிக்கெட் விற்பனை!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செவ்வாய்க்கிழமை காலை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18-வது ஐபிஎல் தொடர் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்து முடிந்தது. இதில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதையும் படிக்க : ஐபிஎல் சரவெடி: தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்..!
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் திடலில் வருகின்ற மார்ச் 28, வெள்ளிக்கிழமை இரவு சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - மும்பை அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 20 நிமிடங்களில் நிறைவடைந்தது, மேலும், 38,000 இருக்கைகளுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.