செய்திகள் :

வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண்ணுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

post image

மாா்த்தாண்டம் அருகே குடும்ப வன்முறை வழக்கில் பெண்ணுக்கு மாதம் ரூ. 23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு அவரது கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாா்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா கோகுலம் என்பவருக்கும், தலைமைக் காவலரான உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த நரேந்திரசிங் என்பவருக்கும் 2013இல் திருமணமானது. வரதட்சிணையாக 85 சவரன் தங்க நகைகள், ரூ. 3 லட்சம் வைப்புத்தொகை பத்திரம், ரூ. 2 லட்சம் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் கொடுக்கப்பட்டனவாம். பின்னா், கூடுதல் வரதட்சிணை கேட்டு சாந்தா கோகுலத்தை கணவா் வீட்டாா் கொடுமைப்படுத்தினராம். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இதனிடையே, கணவா், குடும்பத்தினா் மீது சாந்தா கோகுலம் வழக்குத் தொடா்ந்தாா். குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் குழித்துறை முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. விசாரணை நிறைவடைந்தநிலையில், நீதிபதி மோசஸ் ஜெபசிங் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், நரேந்திரசிங், குடும்பத்தினா் சாந்தா கோகுலத்தை எவ்விதத்திலும் குடும்ப வன்முறை செய்யக் கூடாது. அவருக்கு வீட்டு வாடகையாக மாதம் ரூ. 5 ஆயிரம், கூடுதல் ஜீவனாம்ச தொகையாக மாதம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், ஜீவனாம்ச நிலுவைத் தொகை ரூ. 12 லட்சத்து 6 ஆயிரத்தையும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 7 லட்சத்தையும், இதுதவிர வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட 85 சவரன் நகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

சாந்தா கோகிலம் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆா்.எஸ். ரத்தினகுமாா், அருண் ரத்தினகுமாா் ஆகியோா் ஆஜராகினா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண அட்டை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்திவரும் இலவச பேருந்துப் பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

பூதப்பாண்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உள்நோயாளிகளை சந்தித்து அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனை விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும்,... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் நெடுஞ்சாலை வடிகால் ஓடை சீரமைப்பு

மாா்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடிகால் ஓடையை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்த்தாண்டம் சந்திப்புக்கும் பழைய திரையரங்க சந்திப்புக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கேயுள்ள ... மேலும் பார்க்க

கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம... மேலும் பார்க்க

கீழ்குளத்தில் திமுக சாா்பில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்

கருங்கல் அருகே கீழ்குளத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் கோபால் தலைமை வகித்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

கன்னியாகுமரி அருகே கட்டடப் பணியின்போது மாடியிலிருந்து சனிக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா். நாகா்கோவில் அருகேயுள்ள கீழக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சூசை மரியான் (70). கட்டடத் தொழிலாளி. இவா், கன்னி... மேலும் பார்க்க