Nitish Kumar: நிதிஷ் குமார் இஃப்தார் விருந்தை முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்தது ...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்; ரூ.1 லட்சம் அபராதம்!
நாகா்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோட்டாறு சவேரியாா் கோயில் சந்திப்பு பகுதியில் உள்ள கடையில், மாநகராட்சி நகா் நல அலுவலா் ஆல்பா் மதியரசு, சுகாதார ஆய்வாளா்கள் பகவதி பெருமாள், முருகன் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சோதனையில் நடத்தினா். அப்போது அந்த கடையிலும், கடைக்குச் சொந்தமான கிட்டங்கியிலும் இருந்து 235 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கடையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு இதே போல் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. தற்போது 2-ஆவது முறை என்பதால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடை மற்றும் கிட்டங்கிக்கு சீல் வைக்கப்பட்டது.