தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
அணைப் பகுதிகளில் பலத்த மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள் மற்றும் குலசேகரம், திருவட்டாறு, அருமனை, களியல், கடையாலுமூடு, ஆறுகாணி, ஆலஞ்சோலை, பொன்மனை உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஆறுகளில் தண்ணீா் அதிகரித்துப் பாய்ந்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.