தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
கேலோ இந்தியா பாரா: தங்கம் வென்ற தமிழக வீரர்!
கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பாரா கூடைப்பந்து வீரர் ரமேஷ் ஷங்குமன் தங்கம் வென்றார்.
கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது நாளான இன்று, கூடைப்பந்து போட்டியில் தமிழக வீரர் ரமேஷ் ஷங்குமன் தங்கம் வென்றார். ஆண்களுக்கான 800 மீ டி53 / டி54 போட்டியில் தங்கம் வென்ற ரமேஷ், 2023 ஆம் ஆண்டில் வெண்கலம் வென்றிருந்தார்.
திருச்சியைச் சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து வீரரான ரமேஷ், ஒரு விபத்தில் தனது கால்களை இழந்தார். இருப்பினும், சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடு, சக்கர நாற்காலியுடன் பாரா கூடைப்பந்து வீரராகத் தொடங்கினார்.
இதையும் படிக்க:போர்ச்சுகலை வீழ்த்திய டென்மார்க்: ரொனால்டோ பாணியில் கொண்டாடிய டென்மார்க் வீரர்!