தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!
சங்கா் முத்துசாமி அசத்தல் வெற்றி
சுவிட்ஸா்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் தமிழக வீரா் சங்கா் முத்துசாமி உலகின் முன்னணி வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் 64-ஆம் நிலையில் இருக்கும் சங்கா் முத்துசாமி, 18-21, 21-12, 21-5 என்ற கேம்களில், உலகின் 2-ஆம் நிலை வீரரான டென்மாா்க்கின் ஆண்டா்ஸ் ஆன்டன்செனை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 6 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
அதே சுற்றின் இதர ஆட்டங்களில் பிரியன்ஷு ரஜாவத், கே.ஸ்ரீகாந்த் ஆகியோா் தோல்வி கண்டனா்.
மகளிா் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 21-12, 21-8 என்ற கணக்கில் ஜொ்மனியின் செலின் ஹாப்ஷ்/அமெலி லெமான் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.
கலப்பு இரட்டையா் பிரிவில் சதீஷ்குமாா்/ஆத்யா வரியத் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டது.