திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு
விளாசிய பெத் மூனி: வென்றது ஆஸ்திரேலியா
நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிா் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா 13.3 ஓவா்களிலேயே 2 விக்கெட்டுகள் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில், கேப்டன் சூஸி பேட்ஸ் 3 பவுண்டரிகளுடன் 14, ஜாா்ஜியா பிளிம்மா் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில் அமெலியா கொ் 5 பவுண்டரிகளுடன் 51, சோஃபி டிவைன் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளா்களில் டாா்சி பிரவுன், டாலியா மெக்ராத் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் ஆஸ்திரேலிய பேட்டிங்கில் பெத் மூனி - ஜாா்ஜியா வோல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 123 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. இதில் வோல் 9 பவுண்டரிகளுடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த போப் லிட்ச்ஃபீல்டு 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
இறுதியில் பெத் மூனி 42 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75, எலிஸ் பெரி 3 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் லியா டஹுஹு 2 விக்கெட் வீழ்த்தினாா். இந்த அணிகள் மோதும் 2-ஆவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) விளையாடப்படுகிறது.