தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
ஆஸ்கர் வென்ற அனிமேஷன் படத்தின் 2ஆம் பாகம்..!
ஆஸ்கர் விருது வென்ற கோகோ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
2017ஆம் ஆண்டு வெளியான ’கோகோ’ என்ற நகைச்சுவைக் கலந்த டிராமா அனிமேஷன் படத்தை லீ எட்வர்ட் உன்கிரீஷ் இயக்கியிருந்தார்.
டிஸ்னி, பிக்சர் சார்பாக டார்லா கே ஆண்டர்சன் தயாரித்த இந்தப் படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
தற்போது, இந்தப் படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருப்பதை டிஸ்னி சிஇஓ பாப் இகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தை லீ எட்வர்ட் உன்கிரீஷ் உடன் ஏட்ரியன் மோலினா இணைந்து இயக்கவிருக்கிறார்கள்.
இதன் முதல் பாகம் வெளியானபோது 800 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 68ஆயிரம் கோடி) வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
’கோகோ 2’ படத்தை மார்க் நிக்கல்சன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படம் 2029ஆம் ஆண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Disney and Pixar’s Coco 2 is officially in the works! pic.twitter.com/BtLzn2oIFP
— Pixar (@Pixar) March 20, 2025