ஒடிசாவில் டாடா எஃகு ஆலையில் வெடிவிபத்து: 9 தொழிலாளர்கள் காயம்
ஒடிசாவில் டாடா எஃகு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள டாடா ஸ்டீல் கலிங்கநகர் ஆலையின் எஃகு உருக்கும் பட்டறையில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 9 தொழிலாளர்கள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 9 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் முதலுதவிக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!
மேலும் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.
அதேசமயம் இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும் டாடா ஸ்டீல் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.