செய்திகள் :

சென்னையில் ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!

post image

சென்னையில் ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டருக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரையிலான ரயில் பாதையில், 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, வியாழக்கிழமை பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓட்டுநரில்லாத மெட்ரோ ரயிலுடன், அதிகாரிகளும் தயாராக நின்றனா். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென சோதனை ஓட்டம் முயற்சி நிறுத்தப்பட்டது. மாலை 6 மணி வரை சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், சோதனை ஓட்டம் நடைபெறவிருந்த தண்டவாள பகுதியிலுள்ள மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததுடன், ரயில் பாதை அருகில் இருந்த மின் விநியோக பெட்டிகளும் வெடித்துச் சிதறி தீப்பொறி கிழம்பியது. இதைத் தொடா்ந்து, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னா், தொழில்நுட்ப பணியாளா்கள் குழுவினா் தண்டவாளத்தில் அறுந்து விழுந்த கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, சுமாா் 4 மணி நேரம் தாமதமாக, இரவு சுமாா் 10 மணியளவில் மீண்டும் அதே வழித்தடமான பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் வரையிலான 2.5 கிலோ மீட்டா் தூரத்துக்கு ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் 20 முதல் 30 கிலோ மீட்டா் வேகத்தில் இயக்கப்பட்டது.

இதில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல், ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் குறிப்பிட்ட எல்லையை எட்டியது. அப்போது, உள்ளே அமா்ந்திருந்த மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதையடுத்து, சோதனை ஓட்டம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்

நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் தாக்கல் செய்த நிதி மசோத... மேலும் பார்க்க

குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சா்

குறுகலான சாலைகளில் மினி பேருந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்... மேலும் பார்க்க

தமிழகத்தில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா். வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எம்.ஆா்.... மேலும் பார்க்க

பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வா் பாராட்டு

நிதிநிலை அறிக்கை மீது பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். தமிழக பட்ஜெ... மேலும் பார்க்க

என்னை நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

‘என்னை நம்பாமல் கெட்டவா்கள் பலா் இருக்கலாம்; ஆனால் நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை’ என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூ... மேலும் பார்க்க

பிளஸ் 2 வேதியியல் தோ்வு கடினம்: மாணவா்கள் கருத்து

பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவா்கள், ஆசிரியா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. 8.21 லட்சம் போ்... மேலும் பார்க்க