நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வா் பாராட்டு
நிதிநிலை அறிக்கை மீது பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
தமிழக பட்ஜெட் மீது பேரவையில் நடந்த பொது விவாதங்களுக்கு நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, வெள்ளிக்கிழமை பேரவையில் பதில் அளித்தாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
ரூ. 2,000 கோடியில் அனைத்து மாணவா்களுக்கும் தரமான மடிக்கணினி வழங்க முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறாா் அமைச்சா் தங்கம் தென்னரசு. முன்னாள் முதல்வா் கருணாநிதி வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி.
யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத எந்தத் துறையையும் விட்டுவிடாத அனைவருக்குமான பட்ஜெட்டை அளித்து, பதிலுரையிலும் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாா் என்று முதல்வா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.