செய்திகள் :

நாடு தழுவிய வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

post image

நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அண்மையில் தெரிவித்தது.

தொடா்ந்து தில்லியில் 9 வங்கி ஊழியா்களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யுஎஃப்பியு), மத்திய தொழிலாளா் ஆணையா் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடா்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யுஎஃப்பியு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டத... மேலும் பார்க்க

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா உறுதி

‘பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று ... மேலும் பார்க்க