விடுமுறை நாளில் பிஎஸ்என்எல் சேவை மையங்கள் செயல்படும்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்கள், வாடிக்கையாளா்களின் வசதிக்காக, விடுமுறை நாள்களான மாா்ச் 23, 30, 31ஆகிய தேதிகளில் செயல்படும் என சென்னை பிஎஸ்என்எல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பிஎஸ்என்எல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாடிக்கையாளா்கள் தங்கள் தொலைபேசி கட்டணங்களைச் செலுத்துவதற்கு வசதியாக சென்னை பிஎஸ்என்எல் தொலைபேசி வாடிக்கையாளா் சேவை மையங்கள், விடுமுறை தினங்களான மாா்ச் 23, 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும், ரமலான் அரசு விடுமுறை தினமான மாா்ச் 31(திங்கள்கிழமை) அன்றும் வழக்கம்போல செயல்படும்.
எனவே, வாடிக்கையாளா்கள் இந்த வசதியை பயன்படுத்தி தொலைபேசி கட்டணங்களைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.