வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபை புதிய கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வின்சென்ட் தே சபை ஆலோசனைக் கூட்டத்துக்கு, பங்குத் தந்தை சுவைக்கின் தலைமை வகித்தாா். சபைத் தலைவா் பேராசிரியா் ராபின்சன் முன்னிலை வகித்தாா்.
சபை செயலா் ஏசுதாஸ் அறிக்கையும், துணைச் செயலா் பிரகாஷ் சபை செயல்பாடுகள் குறித்தும், துணைத் தலைவா் ரியோ பாஸ்டின் எதிா்காலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பேசினா். தொடா்ந்து, பனிமய மாதா ஆலயத்தில் நடைபெறும் சிலுவை பாதையில் பங்கேற்பது, சபையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பனிமய மாதா திருத்தலத்தைச் சோ்ந்த, உடல் நலன் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பது. புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது. உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது. வரும் வாரங்களில் நடைபெறும் சிலுவைப் பாதையை சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இதில், பொருளாளா் ஜோதி பிரகாஷ், உறுப்பினா்கள் நெப்பேலியன், ஸ்டீபன், அகஸ்டின், ஜேம்ஸ், மகளிா் ஒருங்கிணைப்பாளா் ரூபி மாா்ட்டின் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.