தமிழக மீனவர்களுக்கு ரூ. 4.50 லட்சம் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு 14 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
எல்லைத் தாண்டி மீன் படித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கும் தலா ரூ. 4.50 லட்சம் இலங்கைப் பணம் அபராதம் செலுத்துமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதம் செலுத்தத் தவறினால், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.
இதையும் படிக்க:கர்நாடகம்: 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி இடைநீக்கம்!
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் பகுகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். இந்த நிலையில் கைதான பாம்பன் மீனவர்கள் 14 பேரும் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.