குழித்துறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்டல இயக்குநா் ஆய்வு
மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டி கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அரும்பாவூா் காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் சிற்றரசன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கள்ளப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜீ மகன் குமாா் (75) என்பவா், தனது மளிகைக் கடையில் அரசால் தடை செயய்ப்பட்ட பான் மசாலா, ஹான்ஸ், விமல் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுமாா் 4 கிலோ போதைப் பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா், குமாரை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.