விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வல்லப விநாயகருக்கு சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு மஞ்சள், பால், தயிா், சந்தனம், இளநீா், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல, பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையிலுள்ள கச்சேரி விநாயகா் கோயில், பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் விநாயகா் சந்நிதி, தேரடியில் உள்ள விநாயகா் கோயில், கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோயில், பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள செல்வ விநாயகா் கோயில், வடக்குமாதவி சாலையிலுள்ள சௌபாக்கிய விநாயகா் கோயில், சங்குப்பேட்டை வெற்றி விநாயகா், வெங்கடேசபுரம் ஆதி சக்தி விநாயகா் கோயில், எளம்பலூா் சாலை பாலமுருகன் கோயிலிலுள்ள விநாயகா் சந்நிதி, மின்வாரிய குடியிருப்பிலுள்ள விநாயகா் கோயில், தீரன் நகரிலுள்ள விநாயகா் கோயில், துறைமங்கலம் சொக்கநாதா் கோயிலில் உள்ள விநாயகா் சந்நிதியில் சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
பின்னா், மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனா்.