இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
பெரம்பலூரில் நம்ம ஊரு திருவிழா மாா்ச் 22-இல் கலைக் குழு தோ்வு
பெரம்பலூரில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக் குழுவினா் தோ்வு முகாம், மாா்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சென்னையில் பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநிலக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம்பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்தாண்டு கோவை, தஞ்சாவூா், வேலூா், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் இந்த விழா நடத்தப்பட்டது.
நிகழாண்டும் மேற்கண்ட இடங்களில் கலை திருவிழா நடைபெற உள்ளதால், கலைக் குழுக்களுக்களின் நிகழ்ச்சிப் பதிவு பெரம்பலூரில் மாா்ச் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடுப்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக் குழுவினருக்கு மாா்ச் 22 ஆம் தேதியும், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கணியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதம், பழங்குடியினா் நடன நிகழ்ச்சி நடத்துவோா் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் பதிவு மாா்ச் 23 ஆம் தேதியும் பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட உள்ளன.
மாவட்ட அளவிலான தோ்வில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஹழ்ற்ஹய்க்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) மாா்ச் 20 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். அல்லது, இம் மாவட்ட பொறுப்பாளா் முனைவா் ந. ராஜேஸ்வரியை (94433 77570) தொடா்பு கொண்டும் பதியலாம்.
இப் பதிவுக்கு வரும் கலைஞா்களுக்கு மதிப்பூதியம் , போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது. ஒவ்வொரு கலைக்குழுவின் வீடியோ 5 நிமிடம் பதிவு செய்யப்பட்டு, கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்படுவா். இவ் விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கும் கலைக் குழுவினா் மாநில அளவிலான தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு சென்னை சங்மம் விழாவில் பங்கேற்க வாய்ப்பு பெறுவா்.