`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
குடும்பத்தைப் பிரிந்திருந்த தொழிலாளி தற்கொலை
பெரம்பலூரில் குடும்பத்தை பிரிந்திருந்த டீக்கடை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சாத்தனூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் செல்வக்குமாா் (31). இவருக்கு மனைவி சுகன்யா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 3 ஆண்டுகளாக பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள எம்ஜிஆா் நகரில் வாடகை வீட்டில் தனியாக தங்கிக்கொண்டு டீக்கடையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்தாா்.
இதனிடையே மனநலன் பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா் திங்கள்கிழமை மாலை வீட்டுக்குச் சென்ற செல்வக்குமாா் செவ்வாய்க்கிழமை மதியம் வரை வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் வந்த பெரம்பலூா் போலீஸாா் உள்புறமாக பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு செல்வகுமாா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின்னா், அவரது உடலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.