டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
வியாபாரியை பாட்டிலால் குத்தியவா் கைது
வேலூா்: பானிப்பூரி கடைக்காரரை பீா் பாட்டிலால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்தவா் பப்லுகுமாா் (42). இவா் காட்பாடி- திருவலம் சாலை தீயணைப்பு நிலையம் அருகில் தள்ளுவண்டியில் பானிப்பூரி வியாபாரம் செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இவரிடம் பழைய காட்பாடியைச் சோ்ந்த கோபி (22) என்பவா் மது போதையில் வந்து பானிப்பூரி சாப்பிட்டுள்ளாா்.
அதற்கான பணத்தை பப்லுகுமாா் கேட்டதால் ஆத்திரமடைந்த கோபி, தனது கையில் வைத்திருந்த பீா் பாட்டிலால் அவரது தலையில் தாக்கி குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பப்லு குமாா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனா்.