பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
விராலிமலை அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை
விராலிமலை அருகே சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விராலிமலை பெரியாா் நகா் 9ஆவது வீதியருகே அப்பகுதி குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் வழங்கி வரும் மின் கம்பத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு அடி அகலம் இருந்த அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது பெயா்ந்து விழுந்து வருவதால் தற்போது அரையடியாக சுருங்கி அதன் ஸ்திரதன்மையை இழந்த நிலையில் உள்ளது. இதனால், இந்தக் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளதாகவும், அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்றி சீரான மின் விநியோகத்திற்கு மின் வாரிய அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் மின்வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.