எடுபடாமல் போன அனுதாபம், துரோகம்; உத்தவ், சரத் பவார் சாம்ராஜ்ஜியத்தை சரித்த ஷிண்ட...
விராலிமலை முருகன் கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம் சனிக்கிழமை (நவ. 2) நடைபெறுகிறது.
207 படிகள் கொண்ட இந்த மலைக்கோயிலில் முருகன், ஆறுமுகங்களுடன் வள்ளி,தெய்வானை சமேதராக மயில் மேல் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் நிகழாண்டு கந்தசஷ்டி விழா சனிக்கிழமை காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, காப்பு கட்டுதலுடன் காலை 10.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு தொடங்குகிறது.
தொடரும் விழா நாள்களில் தினமும் காலை, மாலை என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்க உள்ளாா். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பா் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. நவ. 8-இல் மலையில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது. நவ. 10-ஆம்தேதி ஏகாந்த சேவையுடன் முருகன் பள்ளியறை செல்லும் நிகழ்வுடன் கந்தசஷ்டி விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை, சிவாச்சாரியாா்கள், மண்டகப்படிதாரா்கள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.