தஞ்சாவூர்: பசியோடு காத்திருந்த மாணவர்கள்; 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்; கொந...
விளம்பரத் தட்டிகளை அகற்ற சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் உத்தரவு
சென்னிமலை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகளை (பிளக்ஸ் பேனா்கள்) தாங்களாகவே அகற்ற வேண்டும் என சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் ஏராளமான விளம்பரத் தட்டிகளை (பிளக்ஸ் பேனா்கள்) வைக்கப்பட்டுள்ளன. பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத் தட்டிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், சில நேரங்களில் கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன.
கடந்த தைப்பூசத்தின்போது, சென்னிமலை பேரூராட்சி பகுதியில் ஏராளமான விளம்பரத் தட்டிகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இதனை அகற்றக் கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்த முகிலன், பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனையடுத்து பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் விளம்பரத் தட்டிகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் கொடியேற்றத்துடன் பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி ஏராளமான பக்தா்கள் வாகனங்களில் சென்னிமலைக்கு வருவாா்கள் என்பதால், சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரத் தட்டிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.