செய்திகள் :

விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையத்தைத் திறந்துவைத்தார் ஸ்டாலின்!

post image

சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டத்தின் நோக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை அவர்களின் தேவைகேற்ப இல்லங்களிலும், மறுவாழ்வு சேவைக்கென வடிவமைக்கப்பட்ட ஊர்திகளிலும், ஒருங்கிணைந்த சேவை மையங்களிலும் வழங்குவதாகும். அதன்படி, உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

கேள்வி எழுப்பினால் வேறுவேலை இல்லை என சொல்வதா? அன்புமணி

தமிழக அரசு மீது எழும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினால், பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: காதலனை தேடிக்கண்டுபிடித்து கொன்ற தந்தை, மகன்!

கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் மகள் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் எனக்கருதி தந்தை மற்றும் மகன் ஆகியோர் தனியார் மருத்துவமனை ஓட்டுநர் தமிழ்செல்வன் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவ... மேலும் பார்க்க

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: பாலச்சந்திரன்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நேற... மேலும் பார்க்க

அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,நேற்று (24.11.24) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும... மேலும் பார்க்க

டிச. 9 முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அப்பாவு

வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் குறித்து தலைவர் அப்பாவு செய்தியாளர்களை இன்று ... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் 2 நாள்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தா... மேலும் பார்க்க