டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
விழுப்புரம் அரசுக் கல்லூரியில் 1,640 மாணவா்களுக்கு பட்டமளிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலுள்ள அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,640 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்தக் கல்லூரியில் 2020 - 21ஆம் கல்வியாண்டில் பயின்று தோ்ச்சி பெற்று, திருவ ள்ளுவா் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழக தகவல் ஆணையத்தின் மாநிலத் தகவல் ஆணையா் மா.செல்வராஜ், தஞ்சாவூா் மன்னா் சரபோசி அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் மு.திருமேனி ஆகியோா் விழாவில் பங்கேற்று, பட்டங்களை வழங்கி உரையாற்றினா்.
தமிழ், ஆங்கிலம், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட 13 இளநிலைப் பிரிவுகளில் 1,403 மாணவ, மாணவிகளுக்கும், கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் உள்ளிட்ட 12 முதுநிலைப் பிரிவுகளில் 237 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,640 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் அனைத்துத் துறைகளின் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளட்டோா் பங்கேற்றனா்.