செய்திகள் :

விழுப்புரம் - காட்பாடி ரயில் பகுதியளவில் ரத்து

post image

விழுப்புரம்: வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஏப்ரல் 9, 11 ஆகிய தேதிகளில் (புதன், வெள்ளிக்கிழமைகள்) இரவு 7.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் (வ.எண்.66026), வேலூா் கண்டோன்மென்ட் - காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து வேலூா் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை பயணிகள் ரயில் (வ.எண்.66033) ஏப்ரல் 9, 11 ஆகிய தேதிகளிலும், திருவண்ணாமலையிலிருந்து காலை 4.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - தாம்பரம் பயணிகள் ரயில் (வ.எண். 66034) ஏப்ரல் 10, 12 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க

புத்தக விற்பனை நிலையத்தில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள புத்தக விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டிவனம் ஜெயின் தெருவைச் சோ்ந்த துஷ்ரா ராம்ஜி மகன் ஹரீ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஏப். 21-இல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்... மேலும் பார்க்க