செய்திகள் :

விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி - மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்!

post image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு கடந்த 3-ம் தேதி முதல் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விழுப்புரத்தில் குவிந்திருக்கின்றனர். மூன்றாவது நாளான இன்று, தகுதிகாண் குழுவின் அறிக்கை சமர்ப்பித்தல், புதிய மாநிலக் குழு தேர்வு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தேர்வு, அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் குழு தேர்வு போன்ற நிகழ்வுகள் தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சு.வெங்கடேசன் எம்.பிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

சு. வெங்கடேசன்

அதையடுத்து உடனே திருச்சி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த  மருத்துவர்களிடம் எம்.பி-யின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, ``எம்.பி-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயப்படும்படி எதுவும் இல்லை. இன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிடுவார்” என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

திமுக செயல்பாடுகள் : எதிர்க்கும் தோழமைகள் - நெருக்கடியில் ஸ்டாலின்?

எதிர்க்கும் தோழர்கள்:`அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா?’ மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதிலும், சாம்சங் தொழிற்சாலை விவகாரத்திலிருந்து விமர்சனம்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `மீண்டும் ஈ.வி.கே.எஸ் குடும்பமா?’ காங்கிரஸ் வேட்பாளர் ரேஸில் யார் யார்?

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 14.12.20... மேலும் பார்க்க

"சுயநல தலைவர்களால் கம்யூனிசம் நீர்த்துப்போய்விட்டது"- ஆ.ராசா பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எதிர்வினையென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெ. சண்முகம், ``போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை அரசியல் சாசனத்தில் உள்ளவை. அந்த அடிப்பட... மேலும் பார்க்க

IT RAID; டெல்லி Twist - அண்ணாமலை, எடப்பாடி இருவருக்கும் செக் வைக்கும் BJP தலைமை? | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - கவர்னர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க* - டங்ஸ்டன் விவகாரம்... விவசாயிகள் பேரணி!* - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்... மேலும் பார்க்க

Anbumani: "பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?" - தமிழக காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்

பா.ம.க போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, தி.மு.க போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெர... மேலும் பார்க்க