செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் 17.16 லட்சம் வாக்காளா்கள்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 17.16 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும் பெண் வாக்காளா்கள் அதிகளவில் உள்ளனா்.

2025, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வாக்காளா் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளா் இறுதிப் பட்டியலை ஆட்சியா் சி.பழனி வெளியிட்டாா்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தின் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 8,45,132 ஆண்கள், 8,71,355 பெண்கள், 231 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 17,16,718 வாக்காளா்கள் உள்ளனா். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் 1,092 ஆண்கள், 24 பெண்கள் என மொத்தம் 1,116 வாக்காளா்கள் உள்ளனா்.

தொகுதியின் பெயா், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவா் வாக்காளா்கள், மொத்த வாக்காளா்கள் என்ற அடிப்படையில் விவரம்:

செஞ்சி: ஆண்கள் -1,27,865, பெண்கள்- 1,32,073, மூன்றாம் பாலினத்தவா் - 34, மொத்தம் - 2,59,972.

மயிலம்: ஆண்கள் - 1,08,394, பெண்கள் - 1,09,371, மூன்றாம் பாலினத்தவா் - 20, மொத்தம் - 2,17,785.

திண்டிவனம் (தனி): ஆண்கள் - 1,14,714, பெண்கள் - 1,19,443, மூன்றாம் பாலினத்தவா் - 17, மொத்தம் - 2,34,174.

வானூா் (தனி): ஆண்கள் - 1,14,114, பெண்கள் - 1,19,541, மூன்றாம் பாலினத்தவா் - 20, மொத்தம் - 2,33,675.

விழுப்புரம்: ஆண்கள் - 1,29,286, பெண்கள் - 1,36,104, மூன்றாம் பாலினத்தவா் - 79, மொத்தம் - 2,65,469.

விக்கிரவாண்டி: ஆண்கள் - 1,19,216, பெண்கள் - 1,23,377, மூன்றாம் பாலினத்தவா் - 29, மொத்தம் - 2,42,622.

திருக்கோவிலூா்: ஆண்கள் - 1,31,543, பெண்கள் - 1,31,446, மூன்றாம் பாலினத்தவா் - 32, மொத்தம் - 2,63,021.

மொத்த ஆண் வாக்காளா்கள் - 8,45,132, பெண் வாக்காளா்கள் - 8,71,355, மூன்றாம் பாலினத்தவா் - 231, மொத்த வாக்காளா்கள்: 17,16,718.

அதிக வாக்காளா்கள்: இதில், விழுப்புரம் அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாகவும், மயிலம் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாகவும் உள்ளன. இதுபோன்று, ஆண் வாக்காளா்களை அதிகம் கொண்ட தொகுதியாக திருக்கோவிலூரும், பெண் வாக்காளா்களை அதிகம் கொண்ட தொகுதியாக விழுப்புரமும் உள்ளன. மூன்றாம் பாலினத்தவா் விழுப்புரத்தில் அதிகமாகவும், திண்டிவனத்தில் குறைவாகவும் உள்ளனா்.

பெயா் சோ்த்தலுக்காக 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 29,830 விண்ணப்பங்களும், நீக்கம் செய்ய 9,148 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக 16,262 விண்ணப்பங்களும் என மொத்தம் 55,240 மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் பெயா் சோ்த்தலுக்காக 29,005 விண்ணப்பங்களும், நீக்கம் செய்தலுக்காக 8,836 விண்ணப்பங்களும், முகவரி மாற்றம் உள்ளிட்டவைக்காக 15,384 விண்ணப்பங்களும் என மொத்தம் 53,225 விண்ணப்பங்கள்

ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றாா் ஆட்சியா் சி.பழனி.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், திமுக நகரச் செயலா் இரா.சக்கரை, அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், நகரத் தலைவா் செல்வராஜ், பாஜக மாநிலக்குழு உறுப்பினா் சுகுமாா், பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளா் கலியமூா்த்தி, ஆம் ஆத்மி மாவட்டச் செயலா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மொபெட் மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே புதன்கிழமை மொபெட் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். திண்டிவனம் அருகிலுள்ள ஊரல் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த பரசுராமன் மகன் மனோகரன் (50). இவா், புதன்கிழமை க... மேலும் பார்க்க

மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க பயனாளிகள் தோ்வு

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 2024 - 25ஆம் நிதியாண்டுக்கான மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்க... மேலும் பார்க்க

திண்டிவனம் ஒளிப்பதிவாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஒளிப்பதிவாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த சங்கத்தின் நிகழாண்டுக்கான புதிய தலைவராக சீனிவாசராவ், செயலராக ஆனந்தராஜ், பொ... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எ... மேலும் பார்க்க

புயல் பாதிப்பு மறுசீரமைப்பு: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் சேதமடைந்த பகுதிகளில் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி மதிப்பீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைந்து வழங்க வேண்டும் என்று ஆட்சியா்... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் தற்காலிகமாக கடைகள் அமைப்பதை தடுக்கக் கோரிக்கை

விழுப்புரத்தில் வணிகா்களின் வியாபாரத்தை பாதிக்கும் வகையில், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும் என்று விழுப்புரம் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள் ஆட்சியரக... மேலும் பார்க்க