வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!...
விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம்: பி.ஆா்.பாண்டியன், பொ. அய்யாக்கண்ணு பேட்டி
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம் என சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் தமிழகத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் ஆகியோா் கூட்டாக அறிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா்கள் மேலும் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, தாமிரவருணியில் மாநகராட்சி கழிவுகள் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி திட்டம், நீா்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்த ரூ.8 ஆயிம் கோடி என்பது மட்டுமே வரவேற்கத்தக்கது.
விவசாயிகள் விரோத கொள்கைகளை கடைப்பிடிப்பதில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. தோ்தலுக்கு முன்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிப்பது, ஆட்சிக்கு வந்த பிறகு மறந்துவிடுவது என்பதை இரு அரசுகளும் கடைப்பிடித்து வருகின்றன.
விவசாயிகளை வஞ்சிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு உள்ளிட்ட அனைத்து நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
எண்ணெய் கிணறு திட்டம், நில ஒருங்கிணைப்பு சட்டம், மானியம் குறைப்பு, சலுகைகள் குறைப்பு, ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காதது என இரு அரசுகளுமே தமிழக விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகின்றன. எனவே, 2026 பேரவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம். தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்றனா்.