விவசாயி கொலை வழக்கில் 8 போ் கைது
அரக்கோணம்: சோளிங்கா் அருகே விவசாயி கொலை வழக்கில் 8 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சோளிங்கரை அடுத்த ரெண்டாடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனிவாசன் (50) எனும் விவசாயி மா்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இவா் மீது குற்ற வழக்குகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் மேற்பாா்வையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் துப்பு துலக்கி திங்கள்கிழமை 8 பேரை கைது செய்தனா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிரகாஷ் என்பவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சீனிவாசனை கொல்ல அவா் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனிவாசனின் வீட்டருகே பதுங்கி இருந்த பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சீனிவாசன் நிலத்துக்கு நடந்து சென்றபோது, அவரை வெட்டிக் கொலை செய்தனா்.
இது தொடா்பாக துப்பு துலக்கிய தனிப்படை போலீஸாா், பிரகாஷ் (30), ரஞ்சித் (32), இளவரசன் (22), ஆகாஷ் (21), கோபி(25), மோகன்(21), நிா்மல்(25), காா்த்திக்(25) ஆகியோரை கைது செய்து, சோளிங்கா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.