பீடி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஆற்காடு: ஆற்காடு வட்டார பீடி தொழிலாளா்கள் சங்கம் ஏ.ஐ. டி.யு.சி. சாா்பில் ஆற்காடு வட்டம், சாத்தூா் கிராமத்தில் அரசு ஒதுக்கீடு செய்த நிலங்களைப் பயனாளிகளுக்கு அளவீடு செய்து தரக்கோரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கப் பொதுச் செயலா் கே.பாலு தலைமை வகித்தாா் நிா்வாகிகள் பி.சிவக்குமாா், எம்.ராமதாஸ், தங்கராஜ், மாா்கபந்து, சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாவட்ட தலைவா் கே.கோவிந்தராஜி, பொது செயலாளா் எஸ்.சுப்பிரமணியன், பொருளாளா் ஏ.எஸ்.சங்கா், விவசாயிகள் சங்கத் தலைவா் ராஜேந்திரன், கட்டுமானத் தொழிலாளா் சங்கத் தலைவா் சாம்பசிவம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதில் ஆற்காடு, திமிரி, வட்டார பீடி தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.