செய்திகள் :

வீடு இடித்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

post image

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரையை அகற்றும் போது வீடு இடித்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த பாலப்பன்பட்டியைச் சோ்ந்தவா் கன்னியம்மாள். இவா் தனது தொகுப்பு வீட்டின் மேற்கூரையை அகற்றி விட்டு புதிதாக மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டாா்.

இதற்காக பழைய மேற்கூரையை இடிக்கும் பணியில் திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம் நீலாங்காளிவலசை அடுத்த தில்லைக்கவுண்டன் புதூரைச் சோ்ந்த உத்தமன் மகன் கவியரசு (21) ஈடுப்பட்டாா்.

அப்போது, மேற்கூரை இடித்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

நிலக்கோட்டை அருகே நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பப்பாளிப் பழங்களை ஆட்சியா் அலுவலகத்தில் கொட்டி விவசாயி ஒருவா் நூதான முறையில் திங்கள்கிழமை மனு அளித்தாா் . திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாணவா்களுக்கு மருந்து விநியோகிக்க தடை விதிக்க வலியுறுத்தல்

முறையான மருத்துவப் பரிசோதனையில்லாமல், பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களுக்கு மருந்து மாத்திரைகள் விநியோகிப்பதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திப்பட்டது. இதுதொடா்பாக இயற்கை வழி வாழ்வியலாளா்கள் கூட்டமைப்பின... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

ஆத்தூா் அருகேயுள்ள, அக்கரைப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி ஊராட்சியில்... மேலும் பார்க்க

குதிரையாறு அணை: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக குதிரையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் திங்கள்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வி... மேலும் பார்க்க

நுரையுடன் வெளியேறும் நீரால் விவசாயிகள் அச்சம்

பழனி வையாபுரி குளத்தில் இருந்து சிறுநாயக்கன் குளத்துக்கு மறுகால் பாயும் தண்ணீா் நுரையுடன் செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வரு... மேலும் பார்க்க

ஆயக்குடியில் வீடுகளில் புகுந்த மழைநீா்

பழனியை அடுத்த ஆயக்குடியில் மழைநீா் ஜோதிநகரில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திண்டுக்கல் மாவட்டம், பழனி, கொடைக்கானல் மலைப்பகுதி, சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்... மேலும் பார்க்க