செய்திகள் :

வீட்டுக்குள் இறைச்சி வேண்டாம்! தம்பியைக் கொன்ற சகோதரர்கள்!

post image

மத்தியப் பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த சகோதரர்களுக்கு இடையேயான மோதலில் ஒருவர் பலியானார்.

மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்தில் இந்திரா நகரில் சகோதரர்களான குல்தீப், அன்ஷுல் யாதவ், அமன் மூவரும் கடந்த வாரம் மதுபோதையில் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், மது விருந்து கொண்டாடலாம் என்று சகோதரர்களிடம் அன்ஷுல் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த சமயத்தில் கடைகள் எதுவுமில்லாததால், இறைச்சி வாங்கி வீட்டிலேயே கொண்டாடலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், வீட்டிற்குள் இறைச்சி கொண்டு வரக்கூடாது என்று அன்ஷுலின் சகோதரர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் மூவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து, மதுபோதையில் இருந்த அவர்கள், அன்ஷுலின் கழுத்தை கயிறைக் கொண்டு நெரித்ததால், அன்ஷுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிக்க:நோயாளியின் கண்ணைத் தின்ற எலி? மருத்துவர்கள் அலட்சியம்!

இருப்பினும், அன்ஷுலை அவரது தாயார் அனிதா உள்பட 2 சகோதரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அன்ஷுல் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் மயக்கமடைந்ததாக மருத்துவர்களிடம் அவர்கள் பொய் கூறியுள்ளனர்.

இருப்பினும், அன்ஷுலின் கழுத்தில் கயிறால் நெரித்த தடம் இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கொலை செய்த சகோதரர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற அன்ஷுலின் தாயார், காவல்துறையினரிடமும் அதேபோல் பொய் கூறினார்.

தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இறுதியாக கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மேலும், மறைத்து வைக்கப்பட்டிருந்த கயிறும் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறந்த வாழ்க்கையா? மாதம் 1,500 ரூபாயா? பெண்களுக்கு பிரியங்கா கேள்வி!

பெண்கள் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டுமே தவிர மாதம் ரூ.1500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச்செயலாளரும் வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தி தெரிவ... மேலும் பார்க்க

எலிசபெத் ராணிக்கு வழங்கப்பட்ட கௌரவம் பிரதமர் மோடிக்கும்..!

எலிசபெத் ராணிக்கு பின், நைஜீரியாவின் உயரிய விருதை பெறும் பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு சேர உள்ளது.ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவின் அதிபா் போலா அகமது தைனுபு அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு இருநாள்கள் பய... மேலும் பார்க்க

மங்களூரு: சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம் பெண்கள் பலி

மங்களூருவில் சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி மூன்று இளம் பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், உல்லல் கடற்கரைக்கு அருகில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் சனிக்க... மேலும் பார்க்க

பின்தங்கிய மக்களை முன்னுக்கு கொண்டுவர உழைக்கிறது பாஜக!

பின்தங்கிய பிரிவில் உள்ள மக்களை முன்னுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் பாஜக செயல்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.மேலும் பழங்குடி மக்களுக்கான நிதியை, பிரதமர் மோடி தலைமையிலா... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக முன்னாள் எம்எல்ஏ அனில் ஜா

தலைநகர் தில்லியில் பாஜக முன்னாள் எம்எல்ஏ அனில் ஜா ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் அவர் ஆம் ஆத்மியில் இணைந்தார். இவ... மேலும் பார்க்க

நாக்பூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கங்கனா ரோட் ஷோ

நாக்பூர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கங்கனா ரணாவத் ரோட் ஷோ பிரசாரம் நடத்தினார். 288 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க