செய்திகள் :

வீர தீர சூரன் புரமோஷன் பணிகள் துவக்கம்!

post image

வீர தீர சூரன் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கியுள்ளது.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது.

தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: குட் பேட் அக்லி - சிறப்பு கேமியோவில் பிரபல நடிகர்?

படத்தைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் கமர்ஷியல் கல்ட் கிளாசிக்காக இப்படம் மாறும் என நம்பிக்கையாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வீர தீர சூரன் படக்குழு புரமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளது. இதற்காக நடிகர்கள் விக்ரம், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் இயக்குநர் சு. அருண்குமார் ஆகியோர் நேர்காணல்களை அளித்து வருகின்றனர்.

அல்கராஸ், மெத்வதெவ் அதிா்ச்சி; இறுதியில் சந்திக்கும் டிரேப்பா் - ரூன்!

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ், முன்னணி வீரரான டேனியல் மெத்வதெவ் ஆகியோா் அரையிறுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.... மேலும் பார்க்க

வெற்றிமாறன் பட வாய்ப்பை மறுத்த சீரியல் நடிகை கோமதி பிரியா!

சின்ன திரை நடிகை கோமதி பிரியா வெற்றிமாறன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை நிராகரித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் சிறகடிக்... மேலும் பார்க்க

தனியார் பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்திய மாணவர் கைது!

உ.பி.யில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்திய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் ஐஐஎம்டி தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் காலி... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி - சிறப்பு கேமியோவில் பிரபல நடிகர்?

குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரபல நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ படத்தின் மீது பெரிய... மேலும் பார்க்க

சிறகடிக்க ஆசை மீனா குறித்து வருத்தம் தெரிவித்த எதிர்நீச்சல் இயக்குநர்!

சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியாவை எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் பாராட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் நாக சைதன்யா - சோபிதா!

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவரும் கார் பந்தயப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவும் கடந்தாண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட... மேலும் பார்க்க