சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!
கார் பந்தயத்தில் நாக சைதன்யா - சோபிதா!
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவரும் கார் பந்தயப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவும் கடந்தாண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்குப் பின் சோபிதா எந்தப் படங்களிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. ஆனால், நாக சைதன்யா நடிப்பில் தண்டேல் வெளியாகி வெற்றி பெற்றதுடன் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

இந்த நிலையில், சோபிதா துலிபாலா தன் கணவர் நாக சைதன்யாவுடன் கார் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இது, படப்பிடிப்புக்கான பயிற்சியா இல்லை கார் பந்தயத்தில் ஈடுபடவா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
