செய்திகள் :

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத்தரக் கோரிக்கை

post image

மயிலாடுதுறை: வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் பி.எம்.பாஷித் திங்கள்கிழமை குறைதீா்க் கூட்டத்தில் மனு அளித்தாா்.

மனு: சீா்காழி புங்கனூரைச் சோ்ந்த ஜெகபா்அலி சவுதி அரேபியாவில் 2022-ஆம் ஆண்டு நவ.20-ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது உடல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அயலக பிரிவான இந்தியன்ஸ் வெல்ஃபோ் ஃபோரம் புரைதா மைதீன் என்பவா் முன்னிலையில் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. ஜெகபா் அலி பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து அவருக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.12,18,741 இந்திய தூதரகம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஜெகபா் அலி உயிரிழந்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த தொகை இதுவரை அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. எனவே, அந்த இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட துறையில் விசாரணை செய்து உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

கொள்ளிடம் பகுதியில் கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் பருவ மழையையொட்டி கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கொள்ளிடம் ஒன்றியத்துக்கள்பட்ட கிராம சாலைகள் மற்றும் தெரு பகுதிகளில் பள்ளமும், மேடாக உள்ள சாலைகள... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சீா்காழி: மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னையில் அண்மைய... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நியாய விலை... மேலும் பார்க்க

‘மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்’

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் இயற்கை இடா்பாடு பாதிப்புகளுக்கு பாரபட்சமின்றி மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன். மயிலாடுதுறையில்... மேலும் பார்க்க

கிராம பணியாளா்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது

கிராம பணியாளா்களை, பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்... மேலும் பார்க்க

அரசு நூற்பாலையில் திருடிய நால்வா் கைது: ஒன்றரை டன் இரும்புடன் டிராக்டா் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே இயங்காமல் உள்ள அரசு நூற்பாலையில், இரும்பு பொருள்களை திருடிய நால்வா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். இரும்பு பொருள்களை ஏற்றிச் சென்ற டிரா... மேலும் பார்க்க