Fish : கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்... எது சிறந்தது? - டயட்டீஷியன் விளக்கம்!
வேகமாக சென்ற பைக்; அரிவாள் வெட்டு; தலைதீபாவளிக்கு வந்த பெண் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகிலுள்ள சாதரக்கோன்விளையைச் சேர்ந்தவர் சிவன். இவரின் மனைவி பேச்சியம்மாள். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகளான மகராசி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரண்டாவது மகளான முத்துலெட்சுமியை கடந்த மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்த வேல்முத்து என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். சிவனுடன் அவரின் மகன் கோவிந்தன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி, முத்துலெட்சுமி, தன் கணவருடன் தலை தீபாவளியைக் கொண்டாடுவதற்காக தந்தை சிவன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அன்றிரவு படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்த சக்திகுமார் என்பவர் பைக்கில் சிவன் வீட்டுப்பகுதியில் வேகமாக சென்றாராம். இதனை கோவிந்தன் கண்டித்தார் என்கின்றனர். இந்த விவகாரத்தை அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டனிடம் கோவிந்தன் கூறியுள்ளார். மணிகண்டன், பைக்கில் வேகமாகச் சென்ற சக்திகுமாரை அழைத்து கண்டித்தாராம். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவனைத் தாக்கியுள்ளனர். இதில் ஆத்திமடைந்த கோவிந்தன், வீட்டிற்கு வாந்து அரிவாளை எடுத்து மணிகண்டனை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸார் கோவிந்தனைக் கைது செய்தனர். இந்த நிலையில், சிவன் வீட்டிற்குச் செல்லாமல் அப்பகுதியிலுள்ள அம்மன் கோயிலுக்கு எதிரேயுள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தாராம். அவரைத் தேடி மகள் முத்துலெட்சுமி அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டனின் தம்பி சுப்பையா தாஸ், முத்துலெட்சுமியின் கழுத்தில் கத்தியால் கொடூரமாகக் குத்திவிட்டு தப்பியோடினார்.
இதில் முத்துலெட்சுமி உயிரிழந்தார். தப்பியோடிய சுப்பையாதாஸை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், “என் அண்ணன் மணிகண்டனை வெட்டியதற்கு பழி வாங்குவதற்காக சிவனைக் கொலை செய்யச் சென்றேன். அப்போது மரத்தடியில் சிவனும், முத்துலெட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனுக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், முத்துலெட்சுமி என்னை அவதூறாகப் பேசினார். அதனால் அவரை கத்தியால் குத்திவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.