பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
வேங்கைவயல்: "கூட்டணியிலிருப்பதால் மௌனமாக இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை..." - கே.பாலகிருஷ்ணன்
புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர்,
"பல ஆண்டுகளாகக் கனிமவளக்கொள்ளை நடந்து வருகிறது. அரசே கையகப்படுத்த வேண்டும்... அதன் மூலம் அரசுக்கு வருவாய் வரும் என்றும் சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. தற்போது, வி.வி மணல் உட்பட 7 தாது மணல் நிறுவனங்களுக்குக் கொள்ளைக்கு 3528 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைக் கறாராக வசூல் செய்ய வேண்டும். அரசு எதற்குக் கேட்டாலும், ‘பணம் இல்லை... பணம் இல்லை’ என்று கூறுகிறார்கள். அரசாங்கத்திற்குப் பணம் வரக்கூடிய பல துறைகளைத் தனியாரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் கனிம வளத்தைக் கொள்ளை அடிக்கின்றனர். அதனால், இதனை அரசே கையகப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்.
வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நியாயமான கேள்விகள் உள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கலில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் பல சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்க்கும் போதே மலம் கலந்தார்கள் என்று அறிக்கையில் உள்ளது. ஆனால், இந்த சம்பவம் கண்டறியப்படுவதற்கு முன்னால் இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி உட்படச் சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக எந்த தகவலும் அந்த குற்றப்பத்திரிகை தாக்கலில் இல்லை. அதனால், பல சந்தேகங்களும், பல நியாயமான கேள்விகளும் இருப்பதால் இந்த வழக்கை மீண்டும் ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அது, சி.பி.ஐ-யாக கூட இருக்கலாம். சந்தேகம் இருக்கும்போது அதனை சி.பி.ஐ விசாரிக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிடுவதில் எந்த நஷ்டமும் இல்லை. இந்த குற்றப்பத்திரிகை தாக்கலில் சந்தேகமும், கேள்வியும் இருப்பதால் அதனைத் தீர்க்க சி.பி.ஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
பா.ஜ.க-வை எதிர்க்கின்ற கூட்டணியில் இருக்கின்றோம். எங்களுக்கு ஏற்புடைய விஷயங்களை ஏற்றுக் கொள்கின்றோம். ஏற்க முடியாத விஷயங்களைப் பகிரங்கமாகச் சொல்கின்றோம். கூட்டணியிலிருந்தால் அனைத்திற்கும் மௌனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரியாரை விமர்சிக்கக் குறைந்தபட்ச தகுதி கூட சீமானுக்கு இல்லை. பெரியார் அப்பொழுது உள்ள காலகட்டத்திலே போராடியுள்ளார்.. பெரியாரைப் பற்றிப் பேசச் சீமானுக்கு யார் அனுமதி கொடுத்தது?. ஒரு பெரிய தலைவரைப் பற்றிப் பேசினால் பெரிய ஆள் ஆகி விடலாம் என்று சீமான் எண்ணிப் பேசுகிறார். பெரியாரை விமர்சனம் செய்தால் பெரியாரை விடப் பெரிய ஆளாகச் சீமான் ஆகி விடுவாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY