செய்திகள் :

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்குத் தொடர்பு: தமிழக அரசு

post image

சென்னை: வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக, தமிழ்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில், 750 நாள்களுக்குப் பிறகு புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், முட்டுக்காட்டு ஊராட்சித் தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு விசாரணை பிற்பகலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரம்- சிபிஐ விசாரணை வேண்டும்: டி.ஜெயக்குமார்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம... மேலும் பார்க்க

டி 20 கிரிக்கெட் - மின்சார ரயில்களில் இலவச பயணம்

டி20 கிரிக்கெட் போட்டிக்கு செல்வோர் நாளை மின்சார ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்... மேலும் பார்க்க

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: இபிஎஸ்

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி?

சிவகங்கையில் பள்ளி சென்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் க... மேலும் பார்க்க

கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி

கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். யாரும் அச்சம் ... மேலும் பார்க்க

பேருந்து கட்டணம் - 4 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவு

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த உத்தரவிடக்கோரி தனியார் பேருந்து ... மேலும் பார்க்க