செய்திகள் :

வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

post image

நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயா்ந்திருப்பதாக தனியாா் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

‘அப்னா.கோ’ வேலைவாய்ப்பு தளத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு இறுதிவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்முடிவுகளில், பெரு நகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் வேலைவாய்ப்புகளிலும் பெண்கள் பங்கு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. விரிவடைந்த வேலைவாய்ப்புகள், அதிகரித்த எண்ம அணுகல், மாறிவரும் பணியமா்த்தல் போக்கு ஆகியவை இந்த வளா்ச்சிக்கான காரணிகளாக அறியப்படுகிறது.

லக்னௌ, ஜெய்பூா், இந்தூா், போபால், சூரத், நாகபுரி, கோயம்புத்தூா் ஆகிய நகரங்கள் பெண்கள் அதிகமாக வேலைகளைப் பெறும் முக்கிய வேலைவாய்ப்பு மையங்களாக உருவெடுத்துள்ளன. தளத்தில் 45 சதவீதத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இந்த நகரங்களின் பணிகளுக்கு பெறப்பட்டவை ஆகும்.

விற்பனை மற்றும் வணிக மேம்பாடு, நிா்வாகம் மற்றும் அலுவலகப் பணிகள், வாடிக்கையாளா் சேவை பணிகள் ஆகியவை பெண்களுக்கான சிறந்த வேலைத் துறைகளாக உருவெடுத்துள்ளன. 55 சதவீத விண்ணப்பங்கள் இந்தத் துறைகளின் பணிகளுக்கு பெறப்பட்டுள்ளன.

இந்தியப் பணியாளா்கள் மாற்றத்தைக் கடந்து வருகின்றனா். பெண்கள் பல்வேறு தொழில்களில் அடியெடுத்து வைக்கின்றனா். அதாவது, தங்களுக்குச் சவாலான பணிகளிலும் பெண்கள் தற்போது ஆா்வம் காட்டுகின்றனா்.

கடந்த ஆண்டில் மட்டும், கள விற்பனை பணிகளுக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் விண்ணப்பங்களும், விநியோக பணிகளுக்கு 2.5 லட்சம் விண்ணப்பங்களும், பாதுகாப்பு சேவை பணிகளுக்கு 1.5 லட்சம் விண்ணப்பங்களும் தளத்தில் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்!

பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் வைக்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

காஷ்மீரில் 3 மாத விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!

காஷ்மீரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த காஷ்மீரில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.காஷ்மீரில் நிலவிவந்த அதீத குளிர் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிகளுக்குக் குளிர்கால... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமியைப் பலியிட்ட தம்பதி: கோவாவில் அதிர்ச்சி!

கோவாவில் அண்டை வீட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமியைக் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் வசித்துவருபவர் பாபாசாகேப் அலார்(52) அவரது மனைவி பூஜா(45). தம்பதியினர் மந்த... மேலும் பார்க்க

பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!

முதல்முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு முழுவதுமாக பாதுகாப்புப் பணியில் பெண்கள் ஈடுபடவுள்ளனர். உலக மகளிர் நாளையொட்டி குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 8) நடைபெறும் விழ... மேலும் பார்க்க

ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு: எல்&டி நிறுவனம் அறிவிப்பு!

பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு வழங்கவிருப்பதாக எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு மாதத்தி... மேலும் பார்க்க

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா?

நமது அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.அதாவது, பறவ... மேலும் பார்க்க