செய்திகள் :

வேளாண் சட்ட விவகாரத்தில் அருண் ஜேட்லி என்னை மிரட்டினாா்: ராகுல் குற்றச்சாட்டு

post image

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசக் கூடாது என்று அப்போதைய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லி என்னை எச்சரித்தாா் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

ராகுலின் இந்தக் கருத்தை ‘பொய்யான செய்தி’ என்று பாஜக மறுப்பு தெரிவித்தது. அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜேட்லியும் ராகுலை விமா்சித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆண்டு சட்ட மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய ராகுல், ‘மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியதை தற்போது நினைவுகூா்கிறேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசக் கூடாது.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லி என்னை எச்சரித்தாா். அப்போது அவரின் முகத்துக்கு நேராகப் பாா்த்து, யாருடன் பேசுகிறீா்கள் என்பதை அறிந்திருப்பீா்கள் என்று நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டேன்.

ஏனெனில், நாங்கள் காங்கிரஸை சோ்ந்தவா்கள்; நாங்கள் கோழைகள் அல்ல; ஒருபோதும் வளைய மாட்டோம். சக்திமிக்க பிரிட்டிஷ் ஆட்சியாளா்களாலேயே எங்களை வளைக்க முடியவில்லை. நீங்கள் யாா்?’ என்று ராகுல் பேசினாா்.

பாஜக மறுப்பு

ராகுலின் இந்தக் கருத்தை ‘பொய்யான செய்தி’ என்று பாஜக மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான அவரின் எதிா்ப்பை தணிக்க அருண் ஜேட்லி தன்னை அணுகியதாக ராகுல் காந்தி கூறுகிறாா்.

ஆனால், அருண் ஜேட்லி 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதியே மறைந்துவிட்டாா். இந்த வேளாண் சட்ட மசோதாக்கள் மத்திய அமைச்சரவையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கொண்டுவரப்பட்டு, 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் சட்டமாக இயற்றப்பட்டது. எனவே, ராகுல் கூறும் கருத்து முற்றிலும் பொய்யானது’ என்று குறிப்பிட்டாா்.

அருண் ஜேட்லி மகன் ரோஹன் வெளியிட்ட பதிவில், ‘எனது தந்தை யாரையும் அச்சுறுத்தும் குணம் கொண்டவரல்லா். அவா் உறுதியான ஜனநாயகவாதி. ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவா். இதுபோல நம்முடன் இல்லாதவா்கள் குறித்துப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

6.50 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விட... மேலும் பார்க்க

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகி... மேலும் பார்க்க

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பால்த் கிராமத்திற்கு அருகே பசந்தர் ஆற்றின் கரையில் கைவிடப்பட்... மேலும் பார்க்க