செய்திகள் :

"வைகோ சினிமாவில் இருந்திருந்தால் இன்றைக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்" - தம்பி ராமையா பேசியது என்ன?

post image

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து நடிகர் தம்பி ராமையா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைகோ குறித்துப் பேசிய அவர், "வைகோ சினிமாவில் மட்டும் கால் பதித்திருந்தால் இந்த நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்.

அவர் கண் புருவத்திற்கு, குரலுக்கு, கம்பீரத்திற்கு, அவர் மூக்கின் அழகிற்கு வைகோ தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க முடியாது. அவர் சினிமாவிற்கு வந்திருந்தால் அமிதாப் பச்சன் வைகோவிடம் பிச்சை எடுத்திருக்க வேண்டும்.

வைகோ
வைகோ

ஆனால் அவர் தேர்ந்தெடுத்த துறை அரசியல். ஒரு முறை இசை மேடைக்கு வந்து பேசும்பொழுது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கையில் சிறு குறிப்புகூட இல்லாமல் வைகோ பேசிய பேச்சு அந்த அவ்விழாவில் கலந்துகொண்டிருந்த ரஜினிகாந்த்தையே வியக்க வைத்துவிட்டது.

இன்று அவரின் பரிணாம வளர்ச்சியாகத்தான் தம்பி துரை வைகோவைப் பார்க்கிறேன். அவர் நான் பெரியாரையும் வணங்குவேன். பெருமாளையும் வாங்குவேன் என்கிறார்.

இதுதான் பரிணாம வளர்ச்சி. வாழ்க்கையை நெறிப்படுத்துவது, முறைப்படுத்துவது எல்லாம் ஆன்மீகம்தான்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

காயல்: "ஆண் வர்க்கமே மோசம் என்று இருப்பதை உடைக்க விரும்பினேன்" - இயக்குநராகும் தமயந்தி பேட்டி

எழுத்தாளர் தமயந்தி முதன் முதலாக இயக்கிய 'காயல்' திரைப்படம் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. அதன் இறுதி கட்ட பரபரப்பில் இருக்கிறார் அவர்.தான் இயக்கும் 'காயல்' படத்தின் அம்சங்களை அது கொண்டு வரும் உணர்வ... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி: "கஷ்டப்பட்டு உழைத்த பணத்துலத்தான் உதவி பண்றேன்" - விமர்சனங்களுக்கு KPY பாலா பதில்

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி: "என் படத்துக்கு பேனர் வைக்க, போஸ்டர் ஒட்ட விடல; அதனால" - KPY பாலா என்ன சொல்கிறார்?

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹ... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி: "பாலா சிரித்தால் மக்கள் சிரிக்கிறார்கள்; அழுதால் அழுகிறார்கள்" - நெகிழும் லாரன்ஸ்

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹ... மேலும் பார்க்க

கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு: "நாத்திகர்களும் விரும்பிக்கேட்ட நல்ல பாட்டு" - வைரமுத்து இரங்கல்

கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) மூப்பின் காரணமாக நேற்று (செப்டம்பர் 5) மாலை காலமானார்.1967 முதல் பாடல்கள் எழுதி வந்த இவர், பக்தி பாடல்கள், ஆயிரக்கணக்கான திரைப்படப் பா... மேலும் பார்க்க